‘தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்கள் துரோகிகள்’ - சஞ்சய் ராவத் எம்.பி.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு தேசபக்தி மற்றும் ஜனநாயக கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிராகரிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
‘தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்கள் துரோகிகள்’ - சஞ்சய் ராவத் எம்.பி.
Published on: 

மும்பை,

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்கள் 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துரோகிகளாக நினைவுகூரப்படுவார்கள் என்று உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசமாக கூறினார்.

சரத்பவார் உடல்நிலை

தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) கட்சி தொகுதி மறுவரையரை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்ற பேச்சு அடிபடும் நிலையில், சரத்பவார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை 'டேக்' செய்து உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே இப்போது உயிருடன் இல்லை. தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, போராடவோ அல்லது முடிவெடுக்கவோ முடியாத நிலையில் உள்ளார். இல்லையென்றால், தேசவிரோத தொகுதி மறுசீரமைப்பு மசோதா இவ்வளவு ஊழல் நிறைந்த முறையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருக்காது.

வரலாறு மறக்காது

துரோகிகளின் பெயரை வரலாறு நினைவில் கொள்ளும். தொகுதி மறுவரையறை என்பது இந்த நாட்டு மக்களின் அதிகாரத்தை பறிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டமாகும். இதை ஆதரிக்கும் எவரும் இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள். அவர்கள் 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துரோகிகளாக அறியப்படுவார்கள்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு தேசபக்தி மற்றும் ஜனநாயக கட்சியும் இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும். துரோகிகளின் பெயர்களை வரலாறு எப்போதும் நினைவில் வைத்திருக்கும், துரோகத்திற்கான விளக்கங்கள் காற்றில் கரைந்து போய்விடும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X