

ஹவுரா
திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடைமுறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது.
முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளார்.
இந்த நிலையில் இஷ்ரத் ஜஹான், ஹிஜாப்பில் ஹனுமான் சாலிசா பாராயணத்தில் கலந்து கொண்டதற்காக அவரை அச்சுறுத்தியதாகவும், வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஹவுராவில் உள்ள கோலாபரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்து உள்ளார். அதில் மதச் செயல்பாட்டில் பங்கேற்றதற்காக தனது மைத்துனரும் அவரது நில உரிமையாளரும் தன்னை அச்சுறுத்தியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.
நாங்கள் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம், எந்தவொரு புனித விழாவிலும் பங்கேற்பது நமது ஜனநாயக உரிமை, எனது நாட்டின் நல்ல குடிமகனாக எனது கடமையைச் செய்தேன். நான் ஒரு மதச்சார்பற்ற நபர். இருப்பினும், எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நான் உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறேன் என ஜஹான் தனது புகாரில் கூறி உள்ளார்.
புதன்கிழமை தனது மகனின் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது கோலாபரி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் ஹிஜாப்பில் நான் பாராயணத்தில் கலந்து கொண்டதற்காக என்னை மிரட்டினர் என கூறி உள்ளார்.
கார் குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜஹான் கூறியுள்ளதாகவும், காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரியதாகவும் கோலாபரி அதிகாரி தெரிவித்தார்.