

பாட்னா,
நெடுஞ்சாலையில் லாரியை மறித்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை, டிரைவர் ஒருவர் லாரியின் முன்பக்க கண்ணாடியில் தொங்கியபடியே சுமார் 100 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்றதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகாரைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் சரக்கு லாரியை ஓட்டிச் சென்றபோது, வழிமறித்த நபர் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் லாரியை வேகமாக எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் லாரியின் ஜன்னல் கதவைப் பிடித்தபடி ஏறி முன்பக்கத்தில் தொங்கினார். அவ்வாறு நின்ற அந்த நபரைக் கீழே இறக்கிவிடாமல் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
லாரியின் வெளியே தொங்கியபடி அவர் டிரைவருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் கம்பு, அரிவாளை கொண்டு இருவரும் சண்டைபோட்டுக் கொண்டே சென்றதும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.