கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 மாணவர்கள் கைது

மாணவியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 மாணவர்கள் கைது
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைப் அகமது (19 வயது) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில், மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர். மற்றவர்கள், கல்லூரியின் தற்போதைய மாணவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல்வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com