

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, மால்டா மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு இருமல் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளும் காணப்படுகின்றன. இதனால், மருத்துவமனையில் தொடர்ந்து பெற்றோர் குவிந்து வருகின்றனர்.