உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

உத்தபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் லலித்பூர் மாவட்டம் பண்டல்கண்ட் பகுதியில் இன்று மாலை சிலர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. மேலும், திடீரென மின்னல் தாக்கியது. இதில் ஜஷோத், ராஜ்குமாரி, ராஜேஷ் ஆகிய 3 பேர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சீமா என்பவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com