

கண்ணூர்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சாலா என்கிற இடத்துக்கு அருகே நேற்று அதிகாலை வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேனை, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த ராமர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (45), லிங்கம் (70) ஆகியோரும் வேனில் இருந்தனர்.
இந்த வேன் அங்கு உள்ள சோவாநாடல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதே சாலையில் சென்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில், டிரைவர் உள்பட வேனில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.