ஆந்திர பிரதேசம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

கியாஸ் சிலிண்டர் திடீரென இன்று வெடித்து விபத்திற்குள்ளானதில், 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புட்டபர்த்தி

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கம்மரவாரிபள்ளி கிராமத்தில் கதிரி மண்டல் பகுதியில் வீடு ஒன்றில் தெலுங்கானாவை சேர்ந்த சிலர் தங்கி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் வசித்த வீட்டில் வைத்திருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென இன்று நண்பகல் 12.30 மணியளவில் வெடித்து விபத்திற்குள்ளானது. 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில், சிக்கி 3 பேர் பலியானார்கள்.

இதனை காவல் கண்காணிப்பாளர் எஸ். சதீஷ் உறுதிப்படுத்தி உள்ளார். கியாஸ் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதி செயலா? என்ற விவரம் தெரிய வரவில்லை. சிலிண்டர் திடீரென வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com