

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.