மழைக்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் அருகே பெய்த பலத்த மழையின் காரணமாக ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்தது.
3 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் அருகே செய்குபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் வீர்பான் (வயது 35). இவரது மனைவி நீலம்(33). இவர்களுக்கு 4 குழந்தைகள். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி:

அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில், வீர்பான், நீலம், அவருடைய 4 வயது மகள் காவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற குழந்தைகளான காஜல்(12), மோகினி(10), சூரஜ் (8) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com