காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.
காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்,

புல்வாமாவின் திரால் பகுதியில் உள்ள குலாப் பாக்கில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து ராணுவம் அப்பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடங்கியது. அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்தது. இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை வெடித்தது. பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அப்பகுதியில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டையானது தொடர்ந்து வருகிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com