கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் பலி

அக்கம் பக்கத்தினர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் பகுதியில் தொழிலாளர்கள் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியைக் அமைத்திருந்தனர். அப்போது ஒரு தொழிலாளி அந்த தொட்டிக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சக தொழிலாளியுடன் வீட்டு உரிமையாளரும் உள்ளே இறங்கி பார்த்தார். பின்னர் அவர்களும் விஷவாயுவால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களோடு வந்து தொட்டியில் மயங்கிக் கிடந்தவர்கள் வெளியே எடுத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோத்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






