ஆந்திரா: மின்னல் தாக்கி 3 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா: மின்னல் தாக்கி 3 பேர் பலி
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் விஜயநகர மாவட்டம் போபிலி தாலுகாவில் உள்ள சிந்தடா என்ற கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது.

அப்போது, அந்த கிராமத்தில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com