

அமராவதி,
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி நகரின் ஜம்பெட்டா பகுதியில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்த 4 மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றுள்ளனர்.
மாணவர்கள் 4 பேரும் பிச்சுகலங்கா பகுதியில் கோதாவரி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது 4 மாணவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரையை அடைந்தார். ஆனால், எஞ்சிய 3 மாணவர்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல்களையும் தேடி வருகின்றனர்.