குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி; குளிக்க சென்றபோது சோகம்


குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி; குளிக்க சென்றபோது சோகம்
x

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் ஹம்ரோக் அலிபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே குளம் உள்ளது.

இந்நிலையில், இந்த குளத்தில் குளிக்க அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு கிராமத்தினர் விரைந்து வந்து குளத்தில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் ஆஷிஷ், தேவேந்திரா, சுராஜ் ஆகிய 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story