காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை


காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 13 May 2025 2:44 PM IST (Updated: 13 May 2025 3:03 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் போன்றவற்றால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஷக்ரு கிலீர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. என்கவுன்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story