காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்ரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

இன்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தந்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் மூவரைக்கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள் தான்.

X

Daily Thanthi
www.dailythanthi.com