திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் கொடி, சுவரொட்டிகள் போன்றவை அழிக்கப்பட்டது.
திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு
Published on

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடுகிறார். இவரது தேர்தல் அலுவலகம் முக்காட்டுகர என்ற இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அதிகாலை யாரோ சிலர் அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த கொடிகள், சுவரொட்டிகள் போன்ற தேர்தல் பிரசார பொருட்களையும் அழித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த அலுவலகம் அருகில் சிலர் கும்பலாக செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மண்ணுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றி மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகேஷ் கூறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தோல்வி பயம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். எனவே கூடுதல் மத்திய படைகளை அனுப்பி தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com