திருச்சூர்: தூக்குப்போட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை

ராஜேஷ் மனைவி சமீபத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சூர்: தூக்குப்போட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை
Published on

திருச்சூர்,

கொல்லம் சூரநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருச்சூர் மாவட்டம் மாளா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது மனைவி சமீபத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் ராஜேஷ் 2 நாள் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு வருவதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை.

போலீசார் விசாரணை

இதனால் போலீசார் அவரை செல்போனில் அழைத்தும், அதை ஏற்கவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் வசித்த குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மேலும் இன்ஸ்பெக்டர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com