'தக் லைப்' பட விவகாரம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்-மந்திரி சித்தராமையா ஆதரவு

வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல் மந்திரி உறுதியளித்திருக்கிறார்.
பெங்களூரு,
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் தொடங்கவில்லை.
முன்னதாக நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கடந்த 31-ம் தேதி "தக் லைப்" படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்-மந்திரி சித்தராமையா ஆதரவு தெரிவித்திருக்கிறார். சித்தராமையாவை சந்தித்து 'தக் லைப்' பட பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபை பேசியுள்ளது. வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல் மந்திரி உறுதியளித்திருக்கிறார். மேலும், கன்னட மொழி பிரச்சினையில் அனைவரும் உதியாக நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கிடையில், 'தக் லைப்' படத்தை படத்தை வெளியிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






