திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

வைகுண்ட ஏகாதசிக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
Published on

திருப்பதி, 

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை கடந்த 10-ந்தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இதில் தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com