டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு; இந்தூரில் மேலும் ஒருவர் சிக்கினார் - கைது எண்ணிக்கை 11 ஆக உயர்வு

துப்பாக்கி சூடு தாக்குதலில் நடிகர் டைகர் ஷெராப் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு; இந்தூரில் மேலும் ஒருவர் சிக்கினார் - கைது எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Published on: 

மும்பை,

மும்பை ஜூகு பகுதியில் கடந்த 18-ந் தேதி மாலை, பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் நடிகர் டைகர் ஷெராப் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், அவரது கார் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை குற்றப்பிரிவு போலீசார், முக்கிய குற்றவாளி இந்தூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு விரைந்தனர். பின்னர், இந்தூர் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா தலைமையிலான போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு அதிரடி வேட்டையில், அங்கு மறைந்திருந்த பிராஞ்சல் தக்ரான் (வயது22) என்ற வாலிபரை நேற்று முன்தினம் போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கைதான பிராஞ்சல் தக்ரான், அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது சகோதரரின் சிகிச்சைக்காக 5 நாட்களுக்கு முன்பு இந்தூர் வந்து பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு பின்னணி குறித்து விசாரிக்க இந்தூர் கோர்ட்டு அனுமதியுடன் அவர் மும்பைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com