பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை

இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் என பிரதமர் மோடிக்கு பெயர் சூட்டி அமெரிக்க டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.
பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை
Published on

அமெரிக்காவில் வெளியாகும் "டைம்ஸ் இதழ்" 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது . 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி கட்டுரை வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் படத்தை அட்டைப்படமாக வடிவமைத்து "இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது மே 20-ம் தேதி வரையிலான பதிப்பில் வெளியானது. "இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற தலைப்புடன் இதழின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி இடம் பிடித்திருந்தார். அதாவது ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு இந்தக்கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக்கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com