

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, கடந்த 2014-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் அரசிய லில் தீவிரமாக செயல்பட்டார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடிகை ரம்யா அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் நடிகை ரம்யா கலந்துகொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நான் டி.கே.சிவக்குமாரின் குடும்பத்திற்காக இங்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளாக டி.கே.சிவக்குமாரின் கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. அதை கொண்டாட நான் இங்கு வந்துள்ளேன். அரசியலுக்கு நான் திரும்ப நேரம் வர வேண்டும். டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.