அசாமில் திருப்பதி ஏழுமலையான் கோவில்; முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா ஒப்புதல்


அசாமில் திருப்பதி ஏழுமலையான் கோவில்; முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா ஒப்புதல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Dec 2025 6:12 AM IST (Updated: 22 Dec 2025 6:13 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றது.

கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கும்படி ஆந்திர பிரதேச அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடரந்து கோவில் கட்ட 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு என இருவரும் தொடர்ச்சியாக மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதியுதவி வழங்கவும் அசாம் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. வடகிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக அசாம் உள்ளது. இதனால், முக்கிய ஆன்மீக மையமாக அசாம் இனி மாறும். அசாமில் ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story