திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Jun 2025 12:23 PM IST (Updated: 21 Jun 2025 1:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை தினமான இன்று கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் இலவச தரிசனத்தில் 24 மணி காத்திருந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் காத்திருப்பிற்காக உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளதால் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். தேவஸ்தான அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story