திருப்பதி பிரம்மோற்சவம்: ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவம்: ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளது. பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற வுள்ள ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் ஆகியவை இணைந்து வருவதால், வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் மற் றும் சிறப்பு முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் முதியவர்கள். மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சிறப்பு தரிசனம் ஆகியவையும் இந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

நெறிமுறைக்கு உட்பட்ட வி.ஐ.பி.க்களை தவிர, வருகிற 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com