திருப்பதி: பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்என்று திருப்பதி- திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com