திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம்

15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம்
Published on

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி 15-ந்தேதி நடக்கிறது. அதற்காக, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

னவே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முக்கியமான பிரமுகர்களை தவிர, வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com