திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31ந்தேதி நடை மூடப்படும்; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31ந்தேதி நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31ந்தேதி நடை மூடப்படும்; தேவஸ்தானம் அறிவிப்பு
Published on

திருப்பதி,

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது கிரகணம் ஏற்படுகிறது. இதில் பூமிக்கு பின்னால் சந்திரன் வரும்பொழுது சூரியனின் ஒளி நிலவின் மீது விழாது. இது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 31ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று நடை மூடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடை மூடப்படும் நிலையில், திவ்ய தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

காத்திருக்கும் அறையிலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. அதற்கேற்ப பக்தர்கள் தங்களது தரிசன திட்டத்தினை அமைத்து கொள்ள வேண்டும். தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் இலவச உணவு அன்று ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

#Tirupati #devasthanam #lunareclipse

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com