

திருப்பதி,
திருப்பதி மாவட்டம் வெங்கடகிரி மண்டலம் யாதலூரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் ரெட்டி (வயது 33, விவசாயி. இவர் தனது நிலத்தில் கூலி ஆட்களை வைத்துக் கொண்டு விவசாயப் பணிகளை செய்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வயலுக்கு அருகில் இருந்த விவசாய மோட்டார் அருகே சென்றபோது பிரசாத் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அந்த பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரசாத் ரெட்டியை மீட்டு சிகிச்சைக்காக வெங்கடகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரசாத் ரெட்டியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இறந்தவருக்கு ஒன்றரை வயது மகனும், மனைவியும் உள்ளனர். பிரசாத் ரெட்டி இறப்பு தொடர்பாக வெங்கடகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.