திருப்பதி: ரூ.2 லட்சம் மதிப்புள்ள் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் என்.எஸ்.ஆர். காலனியைச் சேர்ந்த சுரேஷ், கும்மரி தெருவைச் சேர்ந்த நூர்பாஷா சுபான் மற்றும் பாண்டுரு கிராமத்தைச் சேர்ந்த சுதீர் என்பது தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டை நகர்ப்புற போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் சந்கேத்துடன் நகரில் திரிந்து கொண்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை

அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக கூறினர். பின்னர் அவர்களை சோதனையிட்டபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் என்.எஸ்.ஆர். காலனியைச் சேர்ந்த சுரேஷ், கும்மரி தெருவைச் சேர்ந்த நூர்பாஷா சுபான் மற்றும் பாண்டுரு கிராமத்தைச் சேர்ந்த சுதீர் என்பது தெரியவந்தது. வியாபாரி ஒருவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை வாங்கியதாக தெரிவித்தனர்.

பறிமுதல்

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com