திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126 கோடி உண்டியல் காணிக்கை

9 மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1,129 கோடி கிடைத்துள்ளது.
திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126 கோடி உண்டியல் காணிக்கை
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1,129 கோடி கிடைத்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை தொடர்ந்து சாதனை அளவில் பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளன. செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,129 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126.41 கோடி, ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி, ஜூலை மாதம் ரூ.140.25 கோடி, ஜூன் மாதம் ரூ.124.49 கோடி, மே மாதம் ரூ.113.53 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.115.97 கோடி, மார்ச் மாதம் ரூ.125.76 கோடி, பிப்ரவரி மாதம் 28 நாட்களுக்கு ரூ.107.36 கோடி, ஜனவரி மாதம் ரூ.124.55 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

வளர்ச்சிப்பணிகள்

திருப்பதி தேவஸ்தானம் 2026-27ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கு ரூ.5,456 கோடி ஒப்புதல் அளித்துள்ளதுடன், உண்டியல் மூலம் ரூ.1,880 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது. மார்ச் முதல் செப்டம்பர் வரை 7 மாதங்களில் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உண்டியல் காணிக்கை மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. உண்டி யல் காணிக்கை மூலம் தேவஸ்தான ஊழியர்களின் ஊதியம், பக்தர்களுக்கான தங்குமிட வசதி கள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையோடு வழிபடும் ஸ்ரீவெங்கடேஸ்வர சாமிக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் மூலம் தேவஸ்தானத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவது சாதனையாக கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com