திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.17 கோடி

இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.17 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 553 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 483 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒரு உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 17 லட்சம் ஆகும்.

அன்று 3 லட்சத்து 95 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்து வமனையில் 3 ஆயிரத்து 92 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.

நேற்றைய நிலவரப்படி திருமலையில் 17 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com