திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலை பாதுகாக்க ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல்
Published on

திருப்பதி,

ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் கடந்த மாதம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் குறித்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்முறை விளக்கத்துக்கு கடந்த 6-ந்தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி பங்கற்றார்.

அப்போது ஒரு டிரோன் தடுப்பு தொழில்நுட்ப ஜாமர் கருவி அமைப்பை உருவாக்க ரூ.25 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை பாதுகாக்க ரூ.25 கோடி செலவில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com