சேவக் குறித்த லத்தீப் பதிவிற்கு மனோஜ் திவாரி கண்டனம்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் ரஷீத் லத்தீப் வீரேந்திர சேவக் குறித்து இட்டப் பதிவிற்கு மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளர்.
சேவக் குறித்த லத்தீப் பதிவிற்கு மனோஜ் திவாரி கண்டனம்
Published on

புதுடெல்லி

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்த சேவக் பாகிஸ்தான் குறித்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவர் ரஷீத் லத்தீப் 15 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கிரிக்கெட்டையும் கடந்து பலவற்றையும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்க விரும்பாத சேவக் பேசுவதை விட பல நேரங்களில் பேசாமல் இருப்பது நலம் என்றார். ஆனால் சேவக்கிற்கு ஆதரவாக களமிறங்கிய மனோஜ் திவாரி இனிமேல் இது போன்று பதிவிட்டால் லத்தீப்பை செருப்பால் அடிப்பேன் என்று கடிந்து கொண்டார். மேலும் லத்தீப்பிற்கு சேவக்கின் சாதனைகள் குறித்து ஏதும் தெரியவில்லை எனவும் கூறினார். ஆங்கிலம் தெரியாவிட்டால் யாரையேனும் அருகில் வைத்துக்கொண்டு புரிந்து கொண்டு பதில் சொல்லவும் என மனோஜ் திவாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com