உள்துறை அமைச்சகம் முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ‘சாயோனி கோஷ்’ கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்துறை அமைச்சகம் முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
உள்துறை அமைச்சகம் முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்
Published on

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி மாநில தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேவ் அகர்தாலாவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். முதல் மந்திரியின் அந்த கூட்டத்தில், 50 பேருக்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர்.

அப்போது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் தலைவருமான சாயோனி கோஷ், அந்த பகுதியில் காரில் சென்றார்.

முதல் மந்திரியின் கூட்டம் குறித்து சாயோனி கோஷ் தனது டுவிட்டரில்,

எங்கள் வேட்பாளரின் கூட்டங்களில் இதைவிட அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். பா.ஜ.க.வின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டு அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அகர்தலாவில், சாயோனி கோஷ் தங்கியிருந்த ஓட்டலுக்கு திடீரென வந்த பெண் போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். 25-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர், ஹெல்மெட் அணிந்து போலீஸ் ஸ்டேஷனில், திரிணாமுல் தொண்டர்களை சரமாரியாகத் தாக்கினர்.

பா.ஜ.க. தொண்டர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக சாயோனி கோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திரிபுரா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் ரெட்டி கூறுகையில், சாயோனி கைஷ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்ததால் அவரை கைது செய்தோம் என கூறினார்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் பிரசாரம் செய்வதற்கு, சட்டத்தின்படி உரிமைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று திரிபுரா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. திரிபுராவில் ஆளும் பாஜக ஆதரவாளர்கள், தங்கள் வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com