ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன் என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுபி உள்ளது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக்கப்பட்டாரா? ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த மே மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com