காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனத்தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com