அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்

அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்
அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்
Published on

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமாரும் உடன் செல்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com