பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேசினார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேச இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் கொரோனா மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com