

சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வாழ்த்து செய்தியில், திரு.அமித்ஷா ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் பல ஆண்டுகளாக அமித்ஷா உடன் பணியாற்றியுள்ளேன், கட்சியையும் அரசாங்கத்தையும் வலுப்படுத்த அவரது சிறந்த பங்களிப்புகளைக் கண்டுள்ளேன். அவர் அதே ஆர்வத்துடன் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.