இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினரே முக்கிய காரணியாக இருக்கின்றனர்: வெங்கையா நாயுடு

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினரே முக்கிய காரணியாக இருக்கின்றனர் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று கூறியுள்ளார். #Hyderabad
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினரே முக்கிய காரணியாக இருக்கின்றனர்: வெங்கையா நாயுடு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, லட்சக்கணக்கான மாணவர்களை பட்டம் பெற்றவர்களாக ஆக்குவது போதியது அல்ல. அவர்களுக்கு வாழ்க்கை திறனையும் பயிற்றுவிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து அவர், வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் இந்தியா முன்னேற்றம் காண வேண்டும். வரி ஏய்ப்பினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வரி செலுத்துவோரை தேவையற்ற முறையில் துன்புறுத்துவது கூடாது என்றும் கூறினார்.

வருகிற ஆண்டுகளில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரே உள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 65 சதவீதத்தினர் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றது. இதனை முழு அளவில் கவனத்தில் கொண்டு இளைய தலைமுறையினருக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது இந்நேரத்தில் அவசியம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

#Hyderabad #VicePresident #VenkaiahNaidu

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com