குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் - பெண் கைது

குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் - பெண் கைது
Published on

பர்தோலி,

குஜராத் மாநிலத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருப்பவர் ஈஸ்வர் பர்மர். இவருக்கு கடந்த மாதம் 28-ந் தேதி மற்றும் கடந்த 15-ந் தேதிகளில் மிரட்டல் கடிதங்கள் வந்தது. அதில், ரூ.1 கோடி கொடுக்காவிட்டால், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொலை செய்வேன் என கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக பர்தோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் கடிதம் அனுப்பியதாக பர்வீனா மைசூரியா என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com