

புதுடெல்லி,
தண்டவாளம் போன்ற ரெயில்வே சொத்துகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி 2 வக்கீல்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரெயில் தண்டவாளங்கள் கழிப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதுபோல், குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படக்கூடாது. ரெயில்களில் உணவு வினியோகம், துப்புரவு போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், கழிவு பொருட்களை ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கொட்டக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.