

திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை தந்திரி பதவியில் இருந்து நீக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தேவசம்போர்டு மறுத்து உள்ளது. மகரவிளக்கு பண்டிகையை சீர்குலைக்கவே இந்த சர்ச்சை கிளப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.