ராஜஸ்தானில் இன்று 1,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று 1,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இன்று 1,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் இன்று 1,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,956 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 15 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,137 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 14,958 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 74,861 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com