ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,59,052 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இன்று 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 21,412 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,35,990 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com