மராட்டிய மாநிலத்தில் இன்று 2,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியாத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் இன்று 2,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 2,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 34 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2,934 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 34 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com