வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாகும்.
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!
Published on

புதுடெல்லி,

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே 10-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி, மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும்.

இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com